Madurai


“உணர்வாய் உன்னை” – வித்தியாசமான முயற்சி மதுரை மாநகரில் பெரியார் பேருந்து நிருத்தம் அருகேயுள்ள ஃபிரெண்ட்ஸ் மஹாலில் 04.03.07 அன்று சான்றோர் பேரவையின் ஏற்பாட்டில் பொறியாளர் பெரோஸ்கான் அவர்களால் உணர்வாய் உன்னை எனும் தலைப்பில் இஸ்லாமிய பார்வையில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இத்தகைய நம்பிக்கையூட்டுகின்ற மனதுக்கு நிம்மதியை தருகின்ற பக்குவப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள் மாற்று மதத்தவர்களால் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வாழும்கலை ரவிசங்கர்,சுகிசிவம்,நித்யானந்த ஸ்வாமிகள் என பல பிரபலங்கள் உண்டு.உலகத்திற்கே வாழ்க்கை கலையை கற்றுத் தந்த முஹம்மது(ஸல்) அவர்களின் சமுகத்தில் அப்துர் ரஹீம் அவர்களுக்கு பிறகு தன்னம்பிக்கை தொடர்கள்,புத்தகங்கள் எழுதுபவர்கள் அருகிவிட்ட சூழ்நிலையில் இந்நிகழ்ச்சி காலத்தின் கட்டாயம்.பெங்களுரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிக் வாய்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறியாளர் சதாத்துல்லாகான் அவர்கள்தான் Discover Yourself எனும் தலைப்பில் 22 மணிநேர நிகழ்ச்சியாக 3நாட்கள் கடந்த பிப்ரவரி 2006 அன்று துபாயில் நடத்தினார்.அது தமிழ் பேசும் சகோதரர்களுக்காக 6மணி நேர நிகழ்ச்சியாக தமிழில் சுருக்கப்பட்டு துபாய்,அபுதாபி,புஜைரா என அமீரகங்கள் மற்றும் தமிழகத்தில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு 100க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 250 நபர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தி ஒருநாள் முழுக்க ஈடுபாட்டுடன் அமர்ந்தது மதுரை வரலாற்றில் ஒரு மைல்கல்.அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தந்தனர்.சகோ.நசீர் ஜமாலியின் தலைமையுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.பெரோஸ்கான் அவர்கள் நிகழ்ச்சியை 3 ஆகப்பிரித்து முதல் பிரிவு உள்ளத்தை வெறுமையாக்குதல் எனும் தலைப்பில் நடத்தினார்.நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர் தனக்கும் மக்களுக்குமிடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையின் தேவை,நிம்மதி என்பதையும் அதை அடையக்கூடிய வழிமுறையையும் விளக்கினார். எவ்வாறு நாம் வெறும் தகவலை தகவலாக எடுத்து கொள்ளாமல் தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகளாக மாறிவிடுகிறோம் என்பதையும் அப்பா-மகன் இடையிலான உறவு எந்தளவு சீர்குலைந்து இருக்கிறது என்பதையும் இதற்கு தீர்வு நாம் குழந்தைகளைப்போல வெற்றிடத்தில் இருந்து அணுக வேண்டும் என்பதையும் அழகாக விளக்கினார்.ஷைத்தான் நம்மை தொழுகை உட்பட அனைத்து விஷயத்திலும் நிகழ்காலத்தில் வாழவிடாமல் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாய் எவ்வாறு அலைக்கழிக்கிறான் என்பதை விளக்க எடுத்து கொண்ட முயற்சிகள் புதுமை.பயானாக இல்லாமல் கலந்துரையாடலாகவும். PARADIGM SHIFT, கதைகள் என வித்தியாசமாக இருந்தது.முதல் பிரிவின் முடிவில் நம்மைப்பற்றி பிறரின் பார்வையை அறிய அவர்களுடன் பேசவும் அறிவுரை கூறினார்.
மதிய உணவுக்குப்பின் ஆரம்பித்த இரண்டாம் அமர்வில் தங்களை பற்றி தங்கள் உறவுகளின் பார்வையை பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.பின் காரணமும் காரியமும் எனும் தலைப்பில் காரணங்கள் தேடாமல் காரியமாற்றுபவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை விளக்கினார்.நான் என்றால் யார் என்று மனிதனைப்பற்றி சொன்னவர் நாம் விட வேண்டிய சுமைகளை நடைமுறை உதாரணங்களோடு விளக்கினார்.
ஆதம்(அலை)அவர்களின் வரலாறோடு மூன்றாம் அமர்வை ஆரம்பித்த பெரோஸ்கான் ஆதம்,ஷைத்தானின் பிரதிந்திகளாக இருக்கும்நாம் எத்தகைய பண்பாளராக இருக்க வேண்டும் என்று விளக்கி அனைவரையும் உறுதிமொழி எடுக்கச்சொன்னார்.நாம் எண்ணம்-சொல்-செயல் எவ்வாறு விளங்க வேண்டும் என்று விளக்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதுமையான முறைகளின் மூலம் நம் பலவீனத்தை நாமே அறியும் விதத்தில் மனித உறவுகளை சீர்படுத்தும் இம்முயற்சி அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்குமளவு மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முஹைதீன்,சான்றோர் பேரவை.

No comments:

Post a Comment