Abudhabi

ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் (Personality Development Workshop) உலகெங்கிலும் பரவலாக பல்வேறு சமுதாய மக்களால் பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதை தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ் மொழியில் இஸ்லாமிய அடிப்படைக்கு உட்பட்டு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு அமீரகங்களில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மக்கள் மனதில் இஸ்லாமிய அடிப்படைகள், கருத்துகள் ஒரு புதிய கோணத்தில் பதிவு செய்யப்பட்டு அதை செயல் வடிவம் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் வழங்கப்படும் விதம் சொற்பொழிவு நடையில் இல்லாமல் கலந்துரையாடலாக இருப்பதால் மக்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு புத்துணர்ச்சி அடைகின்றனர்.

ஷார்ஜா, துபாய், புஜைராவைத் தொடர்ந்து அபுதாபியில் கேரளா சோஷியல் சென்டரில் 15.12.06 அன்று ஆளுமை மேம்பாட்டுத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோ. ஜலாலுதீன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயிற்சியளித்தார். நம் உள்ளத்தை தூய்மைப் படுத்தி ஈருலகங்களிலும் வெற்றிபெறுதல், கோபம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுதல், நம்மை சுற்றியிருப்பவர்களுடம் அன்பாக இருத்தல், நாட்டிலும், வீட்டிலும் அமைதி, சமாதானத்தை உண்டாக்குதல், நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து கொள்ளுதல், எண்ணத்தை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல், கடந்த காலத்தின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு நிகழ்கால வாழ்க்கையில் வெற்றி பெறுதல், இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை அடைதல் போன்ற தலைப்புகளில் பயிற்சியளித்த சகோ. ஜலாலுதீன், பயிற்சி பெற்றதை செயல்வடிவத்தில் கொண்டுவர கலந்துக் கொண்டவர்களிடமிருந்து உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். இதில் கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களியே நிறைய மனமாற்றம் நிகழ்ந்திருப்பதாக நிகழ்ச்சியின் இறுதியில் கருத்து தெரிவித்தனர். மௌலவி ஹிதாயத்துல்லா நூரி, டாக்டர் நாசர், சமுதாய சிந்தனையாளர்கள் சம்சுதீன் ஹாஜியார், அப்துல் வஹாப், ஷியாபுதீன் ஆகியோர் உட்பட பல்வேறு இயக்கங்களைச் சாhந்த நிர்வாகிகள், பொதுமக்கள் முகாமில் பங்கு கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment