துபாயில் 'உணர்வாய் உன்னை'

துபாய்: துபாயைச் சேர்ந்த ஈமான் அமைப்பினர் உணர்வாய் உன்னை என்ற தன்னம்பிக்கை பயிற்சி முகாமை நடத்தினர். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



துபாயில் அல்கிஸஸ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பள்ளியில் கடந்த 15ம் தேதி ஈமான் அமைப்பினர் உணர்வாய் உன்னை என்ற தன்னம்பிக்கை பயிற்சி முகாமை நடத்தினர். இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமா அத், ஹமீது யாசின் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.



இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி முகம்மது சாலிஹ் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்க, ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி முபாரக் தொடங்கி வைத்தார். அப்போது ஈமான் செய்து வரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில், துபாய் ரஷித் மருத்துமனையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஸலாஹூதின், ஹூசைன் பாஷா, ஜலால் ஆகியோர் தன்னம்பிக்கை பயிற்சியினை அளித்தனர். பயிற்சி வகுப்பில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.



பங்கு பெற்றவர்களுக்கு ஈமான் அமைப்பின் சார்பில், பொதுசெயலாளர் குத்தாலம், லியாகத் அலி, டாக்டர் ஸலாவூதின், ஈமான் அமைப்பின் கல்வித்துறை செயலாளர் முகம்மது தாஹா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். நினைவு பரிசை துணை தலைவர் அலஹாஜ் அப்துல் கத்தீம் வழங்கினார்.



இயந்திரமயமான இந்த வாழ்க்கை சூழலில் இது போன்ற தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிப்பதாக உள்ளது. இது போன்ற பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment