முகாம்கள் நடைபெற்றுள்ள இடங்கள்

1.  ஷார்ஜா
2. துபாய்
3. புஜைரா
4. அபுதாபி
5. அல்அய்ன் (05.01.2007)
6. மண்ணடி (சென்னை)
7. வடமரைக்காயர் தெரு, மண்ணடி (சென்னை)
8. திருவல்லிக்கேணி (சென்னை)
9. கே.கே.நகர் (சென்னை)
10. வடலூர் (கடலூர் மாவட்டம்)
11.  விழுப்புரம்
12. பல்லாவரம் (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
13.  தஞ்சை (21.01.2007)
14. துபாய்(Deira) (09.02.2007)
15. அஜ்மான்
16. சிதம்பரம்
17. மதுரை
18. மஸ்கட்
19. ரியாத்
20. துபாய் (08.06.07-Central School)
21. துபாய் (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
22. ஷார்ஜா IAC (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
23. சிங்கப்பூர்
24. குவைத்
25. ஜித்தா
26. பஹ்ரைன்
27. ருவைஸ், யு...
28. ஷார்ஜா
29. துபாய் முமுக மர்கஸ்
30. துபாய் அல்கூஸ்
31. சென்னை (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
32. துபாய் ஜீனத் அலுவலகம்
33. ஏற்காடு
34. திருவண்ணாமலை
35. ஆரணி
36. அரகண்டநல்லூர்
37. அம்பத்தூர் (JCI)

Invitation - Kuwait Program

துபையில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்

 

துபையில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் 'உணர்வாய் உன்னை' எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (10/08/2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிட்டியூட்டில் நடைபெற்றது.

வளைகுடாவிற்கு வந்து விட்ட அவசரத்தில் ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து வரும் மனிதர்கள் தாங்கள் யார், தங்களிடம் உள்ள திறமைகள் என்ன, தேவையற்ற சிந்தனைகளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைத்து திரிகின்றனர் சிலர்.

இத்தகைய நிலையைப் போக்கிடும் முயற்சியாக கோட்டாறு நண்பர்கள் எடுத்த முயற்சியின் காரணமாய் பயிற்றுநர்கள் பொதக்குடி ஜலால் மற்றும் கள்ளக்குறிச்சி உசேன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்.

ஆங்கிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் துபையில் இம்முகாமை நடத்திய பின்னர் தமிழில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்று வருகிறது.

கோட்டாறு நண்பர்கள் குழுமம் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை துபையில் உள்ள தங்களது ஊர் நண்பர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

'உணர்வாய் உன்னை' பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் தலைவர் நசீர் உசேன் (050 655 2491), செயலாளர் ஜகபர் சாதிக் (050 734 6756), அசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இது போன்ற பயிற்சி முகாம்களைத் தமிழகத்திலும், அமீரகத்திலும் நடத்த விரும்புவோர் ஜலால் (050 614 2633) மற்றும் உசேன் பாஷா (050 385 1929) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: முதுவை ஹிதாயத்

 

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=590

 

 

Ladies workshop at KMCC, Dubai

Unarvai Unnai in Abudhabi

Feedback Forms - Dubai

 

Feedback Forms-Abudhabi

Feedback Forms - Fujairah

News in Media

துபாயில் 'உணர்வாய் உன்னை'

துபாய்: துபாயைச் சேர்ந்த ஈமான் அமைப்பினர் உணர்வாய் உன்னை என்ற தன்னம்பிக்கை பயிற்சி முகாமை நடத்தினர். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



துபாயில் அல்கிஸஸ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பள்ளியில் கடந்த 15ம் தேதி ஈமான் அமைப்பினர் உணர்வாய் உன்னை என்ற தன்னம்பிக்கை பயிற்சி முகாமை நடத்தினர். இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமா அத், ஹமீது யாசின் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.



இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி முகம்மது சாலிஹ் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்க, ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி முபாரக் தொடங்கி வைத்தார். அப்போது ஈமான் செய்து வரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில், துபாய் ரஷித் மருத்துமனையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஸலாஹூதின், ஹூசைன் பாஷா, ஜலால் ஆகியோர் தன்னம்பிக்கை பயிற்சியினை அளித்தனர். பயிற்சி வகுப்பில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.



பங்கு பெற்றவர்களுக்கு ஈமான் அமைப்பின் சார்பில், பொதுசெயலாளர் குத்தாலம், லியாகத் அலி, டாக்டர் ஸலாவூதின், ஈமான் அமைப்பின் கல்வித்துறை செயலாளர் முகம்மது தாஹா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். நினைவு பரிசை துணை தலைவர் அலஹாஜ் அப்துல் கத்தீம் வழங்கினார்.



இயந்திரமயமான இந்த வாழ்க்கை சூழலில் இது போன்ற தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிப்பதாக உள்ளது. இது போன்ற பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

News in Samarasam Magazine

Feedback in English

Sathankulam Abdul Jabbar Writer & Prominent programmer on TV

Assalaamu Alaikum. Yesterday I attended a unique 'training camp' at Ajmaan (UAE). It is very practical and rejuvenates, refreshes and re-assures ones thoughts about Islam. At the end of the day when you come out you realize that Islam is a package of principles and not a bundle of dogmas.That is the winning point and the whole purpose of the show. The impact is equal on the intelligentsia and the illiterate alike. It is a motivational programme devised by Janab Sadathulla Khan (Editor of "Islaamic voice} It lasts a whole day with break for prayers and Lunch and tea provided in-between. The venue was good. Attendance including women was admirable. It is an inter-active programme in which the whole audience invariably participate This program provides a 'grand-stand' view of the practical side of Islam, and pin-points certain innocous mistakes we make day-in and day-out without realising that those are mistakes and cost us very dearly without we knowing it. This programme helps to correct it. Alhamdulillah. Salaams and regards to one and all. Huda Haafiz.
Abdul Jabbar
----------------------------------------------------------------------------------------
Sadik Ali ERP Consultant, Dubai :
Assalamu Alaikum, Alhamdu lillah, it is great pleasure to participate in such a wonderful and enthusiastic event. It is a major “Dauwa” work you’re doing for our society. Present technology changes the way islam is spreading in the world in the form of Mails & Internet. Same way, Dauwa is too having more effect if it is done in the form of training camp similar to yesterdays’ one. This is one of the ways to face the challenges in this era. I am giving the below feedbacks not to show my skills, but to contribute a drop of water in your ocean of “Dauwa”. Mail might be lengthy, but, compared to your sacrification of days, this was nothing. These are suggestions only; it does not mean my suggestion will be correct. Contents of the Session Main Topics & Sub Topics were well organized. Religious inputs were place at proper place on proper times. Topic reflects the current issues with human beings and trainer never drive away from the topics. Arrangements Registration, Place, Mike System, Seating arrangements, Foods, Praying places, toiletries, Lightings, Tutorials, etc were very fine and well organized. Thanks to Organizing Committee. Equipment used Fairly all the tools & equipments were well arranged. Mike system was very good. But, you could use little bigger board, and using different colour pens is one of the way to easily pass the messages to users. For exmples, A topics in Blue colour marker and Plus points on Green and Minuses on red pen. To hear this may be silly, but science says colors and pictures having more power on brain then simple same color text. To add one more, arranging few power point slides and a projector is one of the way to communicate the message easily. Few sponsors can helps to buy the above. Or Top working people could arrange the projector for the sessions from their office on a random basis provided there is no issues on the office. If you feel, this will not be much use on this form of training, please ignore the above suggestion. Future Sessions Unfortunately you show the taste of foods to us and let us stay without further foods. Repeating Unarvai Unnai for more groups definitely helps more people. But, you train few set of people and their batteries may go down while the days goes on. So, whoever attending the above could be re called for second session with some topics such as “Unarthen Ennai, Ippodu Pogum paadha Sariya”, “Payanaglum Ilakkugalum”, “Nera Veenadippa”, “Thalaimayum Koottamaippum”, etc. ALHAMDU LILLAH, Allah is great Allah will give more barkath to all. Wasslam.
An Islamic Brother
---------------------------------------------------------------------------------------------- Abdul Rahman Abu Dhabi It was immense pleasure being part of the “Unarvai Unnai” program conducted in Abu Dhabi on 15-Dec-2006 by “UNARVAI UNNAI” TEAM members. May Almighty Allah bless “UNARVAI UNNAI” team efforts and it is a must attend program for every expatriate brothers I would like to highlight my concern, if you could avoid SHEDDING LIGHTS of any banner or any association in this “UNARVAI UNNAI” program. Pls make more efforts “UNARVAI UNNAI” reach to all muslim brothers…without any colors of banners. This would make

Feedback in Tamil

FUJAIRAH (UAE)
ABUDHABI & DUBAI (UAE)
துபாய் இஸ்லாஹி சென்டர் நாள்: 02.02.2007 யூசுப் மரைக்காயர் இந்த பயிற்சியின் பாணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது..தாவா பணியை செய்ய வேண்டும். என்னைக் கொண்டு அல்லாஹ் பல இஸ்லாத்தை அறியாதவர்களை இஸ்லாத்திற்கு கொண்டு வரச் செய்ய வேண்டும் என்ற என்னுடைய மற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இது போன்ற செமினார் எடுப்பதற்கு பயிற்சி அளிக்குமாறு தங்களிடம் கேட்டுக் கொள்வதோடு அல்லாஹ்விடம் துஆ செய்பவனாககும் இருக்கிறேன்..
ஷம்சுதீன் ஷாபி பயிற்சி முகாமில் எனது மகனுடன் கலந்து கொண்டேன். எனது மனைவியும் மகளும் பெண்களுக்கான இடவசதியின்மையால் மிகவும் வருந்தினார்கள். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. என்னை தஃவா பணியில் அணைத்து மிகவும் அதிவேகமாக செயல்பட உறுதி எடுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்
பீர் முகைதீன்
இன்ஷா அல்லாஹ் இந்த முகாமிற்கு பின் நான் என்னை களப்பணியில் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னிடம் சோம்பேறித்தனம் அதிகமாக இருந்தது. அதை களைவதற்கு முயற்சி செய்வேன்.
N.ஆஷிக் நூர் பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக தனிமனித வாழ்க்கையில் ஒரு முஸ்லிம் தன்னை எவ்வாறு செயல்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி ஸல் அவர்களும் சொன்ன கட்டளைகளை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய எண்ணங்களை பலப்படுத்தும் விதமாக இருந்தது. இந்த இனிய முயற்சி தொடர்ந்து நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக..
அன்வர்தீன் இது நிச்சயமாக கருத்துள்ளதாக அமைந்துள்ளது. இந்த பயிற்சி முகாமிற்க பிறகு எனக்குள் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செமினார் மூலம் நான் பல உறுதி மொழி எடுத்துள்ளேள்.
இடம்: தஞ்சாவுர் நாள்: 21.01.2007
பக்ருதீன் இது ஒரு வித்தியாசமான அணுகுமுiறை. இஸ்லாத்தைப் பற்றி அறியாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருந்தது. மதிப்புடைய நிகழ்ச்சியை நடத்திய சகோரருக்கு நன்றியும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக.
சுலைமான் கான் - மருத்துவர் என் சட்டையின் பின்னே ஒரு சகோதரர் டீயை கொட்டிவிட்டார். அருகில் இருந்த சகோதரர் எங்கள் சட்டையில் டீ கொட்டிவிட்டது என்றார். நீங்கள் கொடுத்த குணமுள்ளவன் என்ற தலைப்பில் நான் முதன் முதலாக மன்னிக்கும் தன்மை கொண்டவன் என்பதை எழுதியிருந்தேன். அது மட்டுமல்ல, என் சட்டையின் முன் நானே டீ யைக் கொட்டிக் கொண்டிருந்தேன். மற்றவர்களை நாம் திட்டலாம். நம்மை நாமே திட்டிக் கொள்ள முடியுமா..? முடியாது.. ஆகையால் சகிப்புத் தன்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு பயன்பாட்டு முகாமாக நான் இதை நினைக்கின்றேன்..
மும்தாஜ் பேகம் அல்ஹம்தலில்லாஹ்.. மனம் லேசானது போல் இருந்தது. இனி வரும் காலங்களிலும் வாழ்க்கையில் நடப்பவையெல்லாம் இறைவனின் நாட்டம் என நினைத்து மனதை இறுக்கமில்லாமல் வைத்துக் கொள்வேன். இன்ஷா அல்லாஹ்
முபாரக் மறந்து போன என் நல்ல குணங்களையும், என் கெட்ட குணங்களையும் நானே மறுபடியும் திருத்திக் கொள்ளும்படியாக இருந்தது. பயிற்சி வகுப்பில் உண்மையாகவே பயன் அளிக்கக் கூடியதாக இருந்தது. நானும் என் அன்னையும் இதில் பங்கு கொண்டோம்.. குரைஷா பேகம் பயிற்சி முகாம் மூலம் விஷயங்கள் பல அறிந்து கொண்டேன். சிதம்பரம்
பு.சித்திக், சிதம்பரம் உணர்ந்தேன் என்னை அது அல்லாஹ்வின் உதவி கொண்டு.
ஆ.வாஹிதா பேகம்,சிதம்பரம். இந்த மாதிரி நிகழ்ச்சி எனக்கு இதுவே முதல் தடவை அகும்.இந்த நிகழ்ச்சி இறைவனை அதிகமாக நினைக்கும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளன.மாதம் ஒருமுறை நடைபெற வேண்டி துஆ செய்கிறேன். எங்களுக்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜமீலா பேகம்,சிதம்பரம். அஸ்ஸலாமு அலைக்கும்.இதுதான் என்னுடைய முதல் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனுபவம். நன்றாக இருந்தது.புரியும்படி தெளிவாக பொறுமையாக சொன்னார்கள்.இதனால் இஸ்லாத்தைப்பற்றி தெறியாத விஷயங்களை அறிந்தேன்.என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.இதன் மூலம் என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.இடம்: அல்அய்ன் நாள்: 05.01.2007 முகம்மது காசிம்
இந்த பயிற்சி முகாம் மூலம் என் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பேசி அவர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற உணர்வவை ஏற்படுத்தியது. இதனை ஊரிலும் எல்லோருக்கும் விளங்கச் செய்து நம் மார்க்கத்தை வலிமை மிக்கதாக ஆக்க வேண்டும என்பதாக இந்த நிகழ்ச்சி மாற்றி உள்ளது.அஹமது நஸீர்
இறையச்சம் உடையவனாகவும் நேர்வழியை பின்பற்றக் கூடியவனாகவும் பிறருக்கும் நல்லவைகளை எடுத்துக் கூறியும் நான் அதன் வழி நடக்கவும் நல்லவைகளை பிறருக்கு செய்யவும் உண்மையான தீன் வழியில் நடக்கவும் போன்ற பயன்களை அடைந்தேன்..ஷர்புதீன்
நல்லதொரு நிகழ்ச்சி. இதுபோல் பல தடவை நடை பெறவேண்டும். அதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளது. பல செய்திகளை நான் இந்த பயிற்சி மூலம் பெற்றேன். மீண்டும் இன்ஷா அல்லாஹ் மறு பயிற்சி முகாமில் கலந்து கொள்வேன்.ஷாகுல் ஹமீது
அல்லாஹ்வுடைய உதவியால் இன்று நடைபெற்ற இந்த மேலான நிகழ்ச்சி காரணமாக பல விஷயங்களை அழகான உதாரணங்கள், விளக்கங்களுடன் அறிந்து கொண்டேன். என் குடும்பத்தினருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து உரையாடச் செய்து குணநலன்களைப்ப பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். பயிற்சி முகாமிற்கு முன்பு இருந்த குண நலன்களை சிலவற்றை பயிற்சி முகாமிற்கு பிறகு மாற்றி அமைத்து வாழ்க்கையில் கொண்டு வர முடிவு செய்தேன்.

Madurai


“உணர்வாய் உன்னை” – வித்தியாசமான முயற்சி மதுரை மாநகரில் பெரியார் பேருந்து நிருத்தம் அருகேயுள்ள ஃபிரெண்ட்ஸ் மஹாலில் 04.03.07 அன்று சான்றோர் பேரவையின் ஏற்பாட்டில் பொறியாளர் பெரோஸ்கான் அவர்களால் உணர்வாய் உன்னை எனும் தலைப்பில் இஸ்லாமிய பார்வையில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இத்தகைய நம்பிக்கையூட்டுகின்ற மனதுக்கு நிம்மதியை தருகின்ற பக்குவப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள் மாற்று மதத்தவர்களால் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வாழும்கலை ரவிசங்கர்,சுகிசிவம்,நித்யானந்த ஸ்வாமிகள் என பல பிரபலங்கள் உண்டு.உலகத்திற்கே வாழ்க்கை கலையை கற்றுத் தந்த முஹம்மது(ஸல்) அவர்களின் சமுகத்தில் அப்துர் ரஹீம் அவர்களுக்கு பிறகு தன்னம்பிக்கை தொடர்கள்,புத்தகங்கள் எழுதுபவர்கள் அருகிவிட்ட சூழ்நிலையில் இந்நிகழ்ச்சி காலத்தின் கட்டாயம்.பெங்களுரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிக் வாய்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறியாளர் சதாத்துல்லாகான் அவர்கள்தான் Discover Yourself எனும் தலைப்பில் 22 மணிநேர நிகழ்ச்சியாக 3நாட்கள் கடந்த பிப்ரவரி 2006 அன்று துபாயில் நடத்தினார்.அது தமிழ் பேசும் சகோதரர்களுக்காக 6மணி நேர நிகழ்ச்சியாக தமிழில் சுருக்கப்பட்டு துபாய்,அபுதாபி,புஜைரா என அமீரகங்கள் மற்றும் தமிழகத்தில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு 100க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 250 நபர்கள் பதிவுக்கட்டணம் செலுத்தி ஒருநாள் முழுக்க ஈடுபாட்டுடன் அமர்ந்தது மதுரை வரலாற்றில் ஒரு மைல்கல்.அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தந்தனர்.சகோ.நசீர் ஜமாலியின் தலைமையுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.பெரோஸ்கான் அவர்கள் நிகழ்ச்சியை 3 ஆகப்பிரித்து முதல் பிரிவு உள்ளத்தை வெறுமையாக்குதல் எனும் தலைப்பில் நடத்தினார்.நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர் தனக்கும் மக்களுக்குமிடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையின் தேவை,நிம்மதி என்பதையும் அதை அடையக்கூடிய வழிமுறையையும் விளக்கினார். எவ்வாறு நாம் வெறும் தகவலை தகவலாக எடுத்து கொள்ளாமல் தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகளாக மாறிவிடுகிறோம் என்பதையும் அப்பா-மகன் இடையிலான உறவு எந்தளவு சீர்குலைந்து இருக்கிறது என்பதையும் இதற்கு தீர்வு நாம் குழந்தைகளைப்போல வெற்றிடத்தில் இருந்து அணுக வேண்டும் என்பதையும் அழகாக விளக்கினார்.ஷைத்தான் நம்மை தொழுகை உட்பட அனைத்து விஷயத்திலும் நிகழ்காலத்தில் வாழவிடாமல் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாய் எவ்வாறு அலைக்கழிக்கிறான் என்பதை விளக்க எடுத்து கொண்ட முயற்சிகள் புதுமை.பயானாக இல்லாமல் கலந்துரையாடலாகவும். PARADIGM SHIFT, கதைகள் என வித்தியாசமாக இருந்தது.முதல் பிரிவின் முடிவில் நம்மைப்பற்றி பிறரின் பார்வையை அறிய அவர்களுடன் பேசவும் அறிவுரை கூறினார்.
மதிய உணவுக்குப்பின் ஆரம்பித்த இரண்டாம் அமர்வில் தங்களை பற்றி தங்கள் உறவுகளின் பார்வையை பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.பின் காரணமும் காரியமும் எனும் தலைப்பில் காரணங்கள் தேடாமல் காரியமாற்றுபவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை விளக்கினார்.நான் என்றால் யார் என்று மனிதனைப்பற்றி சொன்னவர் நாம் விட வேண்டிய சுமைகளை நடைமுறை உதாரணங்களோடு விளக்கினார்.
ஆதம்(அலை)அவர்களின் வரலாறோடு மூன்றாம் அமர்வை ஆரம்பித்த பெரோஸ்கான் ஆதம்,ஷைத்தானின் பிரதிந்திகளாக இருக்கும்நாம் எத்தகைய பண்பாளராக இருக்க வேண்டும் என்று விளக்கி அனைவரையும் உறுதிமொழி எடுக்கச்சொன்னார்.நாம் எண்ணம்-சொல்-செயல் எவ்வாறு விளங்க வேண்டும் என்று விளக்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதுமையான முறைகளின் மூலம் நம் பலவீனத்தை நாமே அறியும் விதத்தில் மனித உறவுகளை சீர்படுத்தும் இம்முயற்சி அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்குமளவு மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முஹைதீன்,சான்றோர் பேரவை.

Fujairah

பெங்களுரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிக் வாய்ஸ் என்ற பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பொறியாளர். சதத்துல்லாகான் அவர்கள் மார்ச் மாதம் துபாய்க்கு வருகைப் புரிந்து இஸ்லாமிய பார்வையில் தன்னல மேம்பாட்டு பயிற்சிகளை மூன்று நாட்கள் பயிற்சியளித்தார். அந்த நிகழ்ச்சி இஸ்லாமிய ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழிலும் நடைபெற வேண்டுமென ஆர்வம் எழுந்து டாக்டர்.சலாஹ்தீன், சகோ.ஜலாலுதீன், சகோ.உசேன் பாஷா, சகோ.பெரோஸ்கான், சகோ. கீழை.இர்பான் சகோ.தக்கலை சித்திக் ஆகியோர் அடங்கிய குழு இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக பல ஆலோசனைகளை மேற்கொண்டு “”உணர்வாய் உன்னை” என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சீரிய முயற்சிக்குப் பின்பு இந்நிகழ்ச்சி தமிழாக்கம் செய்யப்பட்டு முதன் முறையாக ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தில் ஒரு நாள் பயிற்சி முகாமாக நடைபெற்றது, இதில் கலந்துக் கொண்டவர்கள் வெகுவாக கவரப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்ச்சி பர் துபாய் எவரெஸ்ட் ஹோட்டலில் மே மாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு இது தொடர்ந்து அமீரகங்களில் அனைத்து இடங்களிலும் நடைபெற வேண்டுமெனவும், தங்களுக்குள் ஏராளமான மனமாற்றங்களை இந்நிகழ்ச்சி ஏற்படுத்திவிட்டதெனவும் கருத்து தெரிவித்தனர்.
22.09.06, வெள்ளிக் கிழமை அன்று மூன்றாவது பயிற்சி முகாம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மண்டலமான ஃபுஜைராவின் இஸ்லாஹி சென்டரில் காலை 8 மணி முதல் 5 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான சகோதரர்களும், சகோதரிகளும் கலந்துக் கொண்ட இந் நிகழ்ச்சியில் நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுதல், எண்ணத்தை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல், ஆதம் நபியின் கதை, அல்லாஹ் யார்?..அவனுடைய தூதர் யார்? போன்றவைகளைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

நன்றி : மக்கள் உரிமை

Abudhabi

ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் (Personality Development Workshop) உலகெங்கிலும் பரவலாக பல்வேறு சமுதாய மக்களால் பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதை தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ் மொழியில் இஸ்லாமிய அடிப்படைக்கு உட்பட்டு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு அமீரகங்களில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மக்கள் மனதில் இஸ்லாமிய அடிப்படைகள், கருத்துகள் ஒரு புதிய கோணத்தில் பதிவு செய்யப்பட்டு அதை செயல் வடிவம் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் வழங்கப்படும் விதம் சொற்பொழிவு நடையில் இல்லாமல் கலந்துரையாடலாக இருப்பதால் மக்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு புத்துணர்ச்சி அடைகின்றனர்.

ஷார்ஜா, துபாய், புஜைராவைத் தொடர்ந்து அபுதாபியில் கேரளா சோஷியல் சென்டரில் 15.12.06 அன்று ஆளுமை மேம்பாட்டுத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோ. ஜலாலுதீன் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயிற்சியளித்தார். நம் உள்ளத்தை தூய்மைப் படுத்தி ஈருலகங்களிலும் வெற்றிபெறுதல், கோபம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுதல், நம்மை சுற்றியிருப்பவர்களுடம் அன்பாக இருத்தல், நாட்டிலும், வீட்டிலும் அமைதி, சமாதானத்தை உண்டாக்குதல், நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து கொள்ளுதல், எண்ணத்தை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல், கடந்த காலத்தின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு நிகழ்கால வாழ்க்கையில் வெற்றி பெறுதல், இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை அடைதல் போன்ற தலைப்புகளில் பயிற்சியளித்த சகோ. ஜலாலுதீன், பயிற்சி பெற்றதை செயல்வடிவத்தில் கொண்டுவர கலந்துக் கொண்டவர்களிடமிருந்து உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். இதில் கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களியே நிறைய மனமாற்றம் நிகழ்ந்திருப்பதாக நிகழ்ச்சியின் இறுதியில் கருத்து தெரிவித்தனர். மௌலவி ஹிதாயத்துல்லா நூரி, டாக்டர் நாசர், சமுதாய சிந்தனையாளர்கள் சம்சுதீன் ஹாஜியார், அப்துல் வஹாப், ஷியாபுதீன் ஆகியோர் உட்பட பல்வேறு இயக்கங்களைச் சாhந்த நிர்வாகிகள், பொதுமக்கள் முகாமில் பங்கு கொண்டு பயனடைந்தனர்.

நெல்லை ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பாக உணர்வாய் உன்னை

நெல்லை ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பாக உணர்வாய் உன்னை நிகழ்ச்சி துபை தேராவில் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தில் 9.2.2007 அன்று நடைபெற்றது. ஏறத்தாழ 50 சகோதரர்கள் இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. சகோதரர். ஜலாலுதீன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள். சகோதரர். அல்தாப் மீரான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
இஸ்லாமிய பார்வையில் ஆளுமைத்திறன் மேம்பாடு தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம்மிடையே உள்ள தீய குணங்களை எவ்வாறு அகற்றுவது, இறை அச்சத்தை இதயத்தில் எவ்வாறு தேக்குவது, கவலைகளை களைந்து நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன வழி போன்ற ஈருலக வெற்றியை மையமாகக் கொண்டு சகோ.ஜலாலுதீன் அவர்கள் பல விசயங்களை எளிமையான முறையில் தெளிவுபடுத்தினார்கள்.
கலந்து கொண்ட அனைவரும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது எனவும் இந்த நிகழ்ச்சி அமீரகத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இவ்வாறான நிகழ்ச்சிகள் காலத்தின் கட்டாயம் கருதி முனைப்புடன் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


அல்லாஹ் அருள் புரிவானாக!

TMMK HQ in Chennai on 06.01.2007

சென்ற ஜனவரி 6ம் தேதியன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை யகத்தில் தமுமுகவின் ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா, நடத்திய ''உணர்வாய் உன்னை'' என்கிற தலைப்பில் ஆளுமைத் திறன் மேம் பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் 13க்கும் மேற்பட்ட தலைப்புகளில் வகுப்பு நடைபெற்றது. நேரத் தவறாமை குறித்தும், ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்தும் விளக்க வகுப்புகள், பயிற்சி உபகரணங்கள் உதவியுடன் புரியும்படியாக எளிய முறையில் நடைபெற்றன.


மனிதர்கள் தங்கள் கடந்த கால மதிப்பீடுகளின் அடிப்படையில், நிகழ்காலத்தில் முடிவு எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும், நிம்மதியின்மையும் வெகு அழகாக, உதாரணங்களுடன் பயிற்சியாளர் விவரித்துக் கூறினார். மேலும் குர்ஆனின் வசனங்களையும், ஆதம் நபியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் எடுத்துக்கூறி, தீமைகளைத் தவிர்த்து, நன்மையின் பக்கம் மக்கள் நடைபோட அழகிய முறையில் நடத்தப்பட்ட இப்பயிற்சி, உள்ளத்தின் ஆழத்தில் அழகாகப் பதிந்தது என்றால் மிகையல்ல. இந்நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்ததால், வட சென்னை, தென்சென்னை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் சகோதரர் ஹுசைன் பாஷா இந்நிகழ்ச்சியை நடத்தினார். (Courtesy : Makkal Urimai)