Fujairah

பெங்களுரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிக் வாய்ஸ் என்ற பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பொறியாளர். சதத்துல்லாகான் அவர்கள் மார்ச் மாதம் துபாய்க்கு வருகைப் புரிந்து இஸ்லாமிய பார்வையில் தன்னல மேம்பாட்டு பயிற்சிகளை மூன்று நாட்கள் பயிற்சியளித்தார். அந்த நிகழ்ச்சி இஸ்லாமிய ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழிலும் நடைபெற வேண்டுமென ஆர்வம் எழுந்து டாக்டர்.சலாஹ்தீன், சகோ.ஜலாலுதீன், சகோ.உசேன் பாஷா, சகோ.பெரோஸ்கான், சகோ. கீழை.இர்பான் சகோ.தக்கலை சித்திக் ஆகியோர் அடங்கிய குழு இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக பல ஆலோசனைகளை மேற்கொண்டு “”உணர்வாய் உன்னை” என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சீரிய முயற்சிக்குப் பின்பு இந்நிகழ்ச்சி தமிழாக்கம் செய்யப்பட்டு முதன் முறையாக ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தில் ஒரு நாள் பயிற்சி முகாமாக நடைபெற்றது, இதில் கலந்துக் கொண்டவர்கள் வெகுவாக கவரப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்ச்சி பர் துபாய் எவரெஸ்ட் ஹோட்டலில் மே மாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு இது தொடர்ந்து அமீரகங்களில் அனைத்து இடங்களிலும் நடைபெற வேண்டுமெனவும், தங்களுக்குள் ஏராளமான மனமாற்றங்களை இந்நிகழ்ச்சி ஏற்படுத்திவிட்டதெனவும் கருத்து தெரிவித்தனர்.
22.09.06, வெள்ளிக் கிழமை அன்று மூன்றாவது பயிற்சி முகாம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மண்டலமான ஃபுஜைராவின் இஸ்லாஹி சென்டரில் காலை 8 மணி முதல் 5 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான சகோதரர்களும், சகோதரிகளும் கலந்துக் கொண்ட இந் நிகழ்ச்சியில் நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுதல், எண்ணத்தை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல், ஆதம் நபியின் கதை, அல்லாஹ் யார்?..அவனுடைய தூதர் யார்? போன்றவைகளைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

நன்றி : மக்கள் உரிமை

No comments:

Post a Comment