Feedback in Tamil

FUJAIRAH (UAE)
ABUDHABI & DUBAI (UAE)
துபாய் இஸ்லாஹி சென்டர் நாள்: 02.02.2007 யூசுப் மரைக்காயர் இந்த பயிற்சியின் பாணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது..தாவா பணியை செய்ய வேண்டும். என்னைக் கொண்டு அல்லாஹ் பல இஸ்லாத்தை அறியாதவர்களை இஸ்லாத்திற்கு கொண்டு வரச் செய்ய வேண்டும் என்ற என்னுடைய மற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இது போன்ற செமினார் எடுப்பதற்கு பயிற்சி அளிக்குமாறு தங்களிடம் கேட்டுக் கொள்வதோடு அல்லாஹ்விடம் துஆ செய்பவனாககும் இருக்கிறேன்..
ஷம்சுதீன் ஷாபி பயிற்சி முகாமில் எனது மகனுடன் கலந்து கொண்டேன். எனது மனைவியும் மகளும் பெண்களுக்கான இடவசதியின்மையால் மிகவும் வருந்தினார்கள். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. என்னை தஃவா பணியில் அணைத்து மிகவும் அதிவேகமாக செயல்பட உறுதி எடுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ்
பீர் முகைதீன்
இன்ஷா அல்லாஹ் இந்த முகாமிற்கு பின் நான் என்னை களப்பணியில் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னிடம் சோம்பேறித்தனம் அதிகமாக இருந்தது. அதை களைவதற்கு முயற்சி செய்வேன்.
N.ஆஷிக் நூர் பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக தனிமனித வாழ்க்கையில் ஒரு முஸ்லிம் தன்னை எவ்வாறு செயல்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி ஸல் அவர்களும் சொன்ன கட்டளைகளை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய எண்ணங்களை பலப்படுத்தும் விதமாக இருந்தது. இந்த இனிய முயற்சி தொடர்ந்து நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக..
அன்வர்தீன் இது நிச்சயமாக கருத்துள்ளதாக அமைந்துள்ளது. இந்த பயிற்சி முகாமிற்க பிறகு எனக்குள் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செமினார் மூலம் நான் பல உறுதி மொழி எடுத்துள்ளேள்.
இடம்: தஞ்சாவுர் நாள்: 21.01.2007
பக்ருதீன் இது ஒரு வித்தியாசமான அணுகுமுiறை. இஸ்லாத்தைப் பற்றி அறியாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருந்தது. மதிப்புடைய நிகழ்ச்சியை நடத்திய சகோரருக்கு நன்றியும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக.
சுலைமான் கான் - மருத்துவர் என் சட்டையின் பின்னே ஒரு சகோதரர் டீயை கொட்டிவிட்டார். அருகில் இருந்த சகோதரர் எங்கள் சட்டையில் டீ கொட்டிவிட்டது என்றார். நீங்கள் கொடுத்த குணமுள்ளவன் என்ற தலைப்பில் நான் முதன் முதலாக மன்னிக்கும் தன்மை கொண்டவன் என்பதை எழுதியிருந்தேன். அது மட்டுமல்ல, என் சட்டையின் முன் நானே டீ யைக் கொட்டிக் கொண்டிருந்தேன். மற்றவர்களை நாம் திட்டலாம். நம்மை நாமே திட்டிக் கொள்ள முடியுமா..? முடியாது.. ஆகையால் சகிப்புத் தன்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு பயன்பாட்டு முகாமாக நான் இதை நினைக்கின்றேன்..
மும்தாஜ் பேகம் அல்ஹம்தலில்லாஹ்.. மனம் லேசானது போல் இருந்தது. இனி வரும் காலங்களிலும் வாழ்க்கையில் நடப்பவையெல்லாம் இறைவனின் நாட்டம் என நினைத்து மனதை இறுக்கமில்லாமல் வைத்துக் கொள்வேன். இன்ஷா அல்லாஹ்
முபாரக் மறந்து போன என் நல்ல குணங்களையும், என் கெட்ட குணங்களையும் நானே மறுபடியும் திருத்திக் கொள்ளும்படியாக இருந்தது. பயிற்சி வகுப்பில் உண்மையாகவே பயன் அளிக்கக் கூடியதாக இருந்தது. நானும் என் அன்னையும் இதில் பங்கு கொண்டோம்.. குரைஷா பேகம் பயிற்சி முகாம் மூலம் விஷயங்கள் பல அறிந்து கொண்டேன். சிதம்பரம்
பு.சித்திக், சிதம்பரம் உணர்ந்தேன் என்னை அது அல்லாஹ்வின் உதவி கொண்டு.
ஆ.வாஹிதா பேகம்,சிதம்பரம். இந்த மாதிரி நிகழ்ச்சி எனக்கு இதுவே முதல் தடவை அகும்.இந்த நிகழ்ச்சி இறைவனை அதிகமாக நினைக்கும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளன.மாதம் ஒருமுறை நடைபெற வேண்டி துஆ செய்கிறேன். எங்களுக்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜமீலா பேகம்,சிதம்பரம். அஸ்ஸலாமு அலைக்கும்.இதுதான் என்னுடைய முதல் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனுபவம். நன்றாக இருந்தது.புரியும்படி தெளிவாக பொறுமையாக சொன்னார்கள்.இதனால் இஸ்லாத்தைப்பற்றி தெறியாத விஷயங்களை அறிந்தேன்.என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.இதன் மூலம் என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.இடம்: அல்அய்ன் நாள்: 05.01.2007 முகம்மது காசிம்
இந்த பயிற்சி முகாம் மூலம் என் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பேசி அவர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற உணர்வவை ஏற்படுத்தியது. இதனை ஊரிலும் எல்லோருக்கும் விளங்கச் செய்து நம் மார்க்கத்தை வலிமை மிக்கதாக ஆக்க வேண்டும என்பதாக இந்த நிகழ்ச்சி மாற்றி உள்ளது.அஹமது நஸீர்
இறையச்சம் உடையவனாகவும் நேர்வழியை பின்பற்றக் கூடியவனாகவும் பிறருக்கும் நல்லவைகளை எடுத்துக் கூறியும் நான் அதன் வழி நடக்கவும் நல்லவைகளை பிறருக்கு செய்யவும் உண்மையான தீன் வழியில் நடக்கவும் போன்ற பயன்களை அடைந்தேன்..ஷர்புதீன்
நல்லதொரு நிகழ்ச்சி. இதுபோல் பல தடவை நடை பெறவேண்டும். அதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளது. பல செய்திகளை நான் இந்த பயிற்சி மூலம் பெற்றேன். மீண்டும் இன்ஷா அல்லாஹ் மறு பயிற்சி முகாமில் கலந்து கொள்வேன்.ஷாகுல் ஹமீது
அல்லாஹ்வுடைய உதவியால் இன்று நடைபெற்ற இந்த மேலான நிகழ்ச்சி காரணமாக பல விஷயங்களை அழகான உதாரணங்கள், விளக்கங்களுடன் அறிந்து கொண்டேன். என் குடும்பத்தினருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து உரையாடச் செய்து குணநலன்களைப்ப பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். பயிற்சி முகாமிற்கு முன்பு இருந்த குண நலன்களை சிலவற்றை பயிற்சி முகாமிற்கு பிறகு மாற்றி அமைத்து வாழ்க்கையில் கொண்டு வர முடிவு செய்தேன்.

No comments:

Post a Comment