மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

உணர்வாய் உன்னை! என்ற ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் அக்டோபர் 11ம் தேதி பட்ஸ் பப்ளிக் பள்ளி ஆடிட்டோரியத்தில் பிரேம் நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சாதிக் அக்மல் அவர்கள் வரவேற்புரையாற்ற, நிகழ்ச்சியை ஜலாலுதீன் அவர்கள் அறிமுகவுரையாற்றி துவக்கிவைத்தார்.



பல்வேறு ஆளுமைத் திறனை வளர்க்கக் கூடிய முறைகளைக் குறித்து மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹூசைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.



கலந்துக்கொண்டவர்களுக்கு பயிற்சி குறிப்பேடுகள், சிற்றுண்டி வழங்கப்பட்டது. A.S.இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சென்னை நூர் பவுன்டேஷன், பரமக்குடி அன்னை ஆயிஷா(ரலி) அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



தங்கள் வாழ்வை புத்துணர்வோடு வாழ்வதற்கு வழிகாட்டியாக இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது என கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

துபாயில் நடைபெறவுள்ள உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

உணர்வாய் உன்னை! என்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அக்டோபர் 11-ம் தேதி மதியம் 02.45 மணி முதல் இரவு 09.00 மணி வரை துபாய் முஹைஸ்னா பகுதியிலுள்ள BUDS PUBLIC SCHOOL ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.

 

ஏற்கனவே அபுதாபி, துபாய், ஷார்ஜா, ரியாத், தம்மாம், சிங்கப்பூர், குவைத், பஹ்ரைன், மஸ்கட் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பயிற்சி முகாம் மீண்டும் துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் ஹூசைன் பாஷா அவர்கள் பயிற்சியளிக்கிறார்.

 

முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 055 8622770, 050 9595216, 050 2933713 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு info@unarvaiunnai.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 

பயிற்சி குறிப்பேடுகள், கையேடு மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட உள்ளது.