முகாம்கள் நடைபெற்றுள்ள இடங்கள்

1.  ஷார்ஜா
2. துபாய்
3. புஜைரா
4. அபுதாபி
5. அல்அய்ன் (05.01.2007)
6. மண்ணடி (சென்னை)
7. வடமரைக்காயர் தெரு, மண்ணடி (சென்னை)
8. திருவல்லிக்கேணி (சென்னை)
9. கே.கே.நகர் (சென்னை)
10. வடலூர் (கடலூர் மாவட்டம்)
11.  விழுப்புரம்
12. பல்லாவரம் (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
13.  தஞ்சை (21.01.2007)
14. துபாய்(Deira) (09.02.2007)
15. அஜ்மான்
16. சிதம்பரம்
17. மதுரை
18. மஸ்கட்
19. ரியாத்
20. துபாய் (08.06.07-Central School)
21. துபாய் (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
22. ஷார்ஜா IAC (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
23. சிங்கப்பூர்
24. குவைத்
25. ஜித்தா
26. பஹ்ரைன்
27. ருவைஸ், யு...
28. ஷார்ஜா
29. துபாய் முமுக மர்கஸ்
30. துபாய் அல்கூஸ்
31. சென்னை (பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி)
32. துபாய் ஜீனத் அலுவலகம்
33. ஏற்காடு
34. திருவண்ணாமலை
35. ஆரணி
36. அரகண்டநல்லூர்
37. அம்பத்தூர் (JCI)

Invitation - Kuwait Program

துபையில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்

 

துபையில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் 'உணர்வாய் உன்னை' எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (10/08/2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிட்டியூட்டில் நடைபெற்றது.

வளைகுடாவிற்கு வந்து விட்ட அவசரத்தில் ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து வரும் மனிதர்கள் தாங்கள் யார், தங்களிடம் உள்ள திறமைகள் என்ன, தேவையற்ற சிந்தனைகளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைத்து திரிகின்றனர் சிலர்.

இத்தகைய நிலையைப் போக்கிடும் முயற்சியாக கோட்டாறு நண்பர்கள் எடுத்த முயற்சியின் காரணமாய் பயிற்றுநர்கள் பொதக்குடி ஜலால் மற்றும் கள்ளக்குறிச்சி உசேன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்.

ஆங்கிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் துபையில் இம்முகாமை நடத்திய பின்னர் தமிழில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்று வருகிறது.

கோட்டாறு நண்பர்கள் குழுமம் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை துபையில் உள்ள தங்களது ஊர் நண்பர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

'உணர்வாய் உன்னை' பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் தலைவர் நசீர் உசேன் (050 655 2491), செயலாளர் ஜகபர் சாதிக் (050 734 6756), அசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இது போன்ற பயிற்சி முகாம்களைத் தமிழகத்திலும், அமீரகத்திலும் நடத்த விரும்புவோர் ஜலால் (050 614 2633) மற்றும் உசேன் பாஷா (050 385 1929) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: முதுவை ஹிதாயத்

 

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=590

 

 

Ladies workshop at KMCC, Dubai

Unarvai Unnai in Abudhabi

Feedback Forms - Dubai

 

Feedback Forms-Abudhabi

Feedback Forms - Fujairah

News in Media

துபாயில் 'உணர்வாய் உன்னை'

துபாய்: துபாயைச் சேர்ந்த ஈமான் அமைப்பினர் உணர்வாய் உன்னை என்ற தன்னம்பிக்கை பயிற்சி முகாமை நடத்தினர். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



துபாயில் அல்கிஸஸ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பள்ளியில் கடந்த 15ம் தேதி ஈமான் அமைப்பினர் உணர்வாய் உன்னை என்ற தன்னம்பிக்கை பயிற்சி முகாமை நடத்தினர். இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமா அத், ஹமீது யாசின் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.



இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி முகம்மது சாலிஹ் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்க, ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி முபாரக் தொடங்கி வைத்தார். அப்போது ஈமான் செய்து வரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில், துபாய் ரஷித் மருத்துமனையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஸலாஹூதின், ஹூசைன் பாஷா, ஜலால் ஆகியோர் தன்னம்பிக்கை பயிற்சியினை அளித்தனர். பயிற்சி வகுப்பில் ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.



பங்கு பெற்றவர்களுக்கு ஈமான் அமைப்பின் சார்பில், பொதுசெயலாளர் குத்தாலம், லியாகத் அலி, டாக்டர் ஸலாவூதின், ஈமான் அமைப்பின் கல்வித்துறை செயலாளர் முகம்மது தாஹா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். நினைவு பரிசை துணை தலைவர் அலஹாஜ் அப்துல் கத்தீம் வழங்கினார்.



இயந்திரமயமான இந்த வாழ்க்கை சூழலில் இது போன்ற தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் புத்துணர்வு அளிப்பதாக உள்ளது. இது போன்ற பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.